ETV Bharat / state

திச, திஈய, குவிரன் - நெல்லையில் அடுத்தடுத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகளும் பெயரும்! - மண்பானை ஓடுகள் கண்டெடுப்பு

திருநெல்வேலி துலுக்கர்பட்டி அகழ்வாராய்ச்சியில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

நெல்லை அகழ்வாராய்ச்சியில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள்

author img

By

Published : Jul 4, 2023, 12:12 PM IST

திருநெல்வேலி: தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்தும் வாழ்வியல் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை சார்பில் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நாகரிகத்தில் இருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு பெருமையோடு பேசியிருந்தார்.

அதாவது வற்றாத ஜீவ நதி என அழைக்கப்படும் திருநெல்வேலி தாமிரபரணி (பொருநை) ஆற்றங்கரை நாகரிகம் பழமையானது என்றும் பெருமையாகப்பேசி இருந்தார். எனவே, பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் திருநெல்வேலியில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அதே போல் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிகளும் தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் கடந்த பல மாதங்களாக 36 ஏக்கரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. துலுக்கர்பட்டியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியின் போது கடந்த ஜூன் 27ஆம் தேதி ‘புலி’ என்ற தமிழ் வார்த்தை பொறிக்கப்பட்ட மண் பானை ஓடுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். கருப்பு சிகப்பு நிறம் கொண்ட அந்த பானையில் புலி என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

நெல்லை அகழ்வாராய்ச்சியில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள்
நெல்லை அகழ்வாராய்ச்சியில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள்

இந்த நிலையில் ஒரு வார கால இடைவேளியில் இன்று மீண்டும் துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண் பானை ஓடுகள் கிடைத்து உள்ளன. அதன்படி தற்போது குவிர(ன்), 'திஈய' மற்றும் 'திச' என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் திருநெல்வேலி நம்பியாற்று படுகையில் எழுத்தறிவு மிக்க சமூகம் வாழ்ந்து வந்தமைக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இங்கு ஏற்கனவே 1100க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ''திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

  • அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!

    திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன். அதனைத்… pic.twitter.com/rvnGsVLnp6

    — Thangam Thenarasu (@TThenarasu) July 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்து உள்ள பானை ஓடுகளில் 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்று உள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நெல்லையில் புலி என்ற வார்த்தை பொறித்த மண்பானை ஓடு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.