ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; நெல்லையில் 80 வயதில் பனைமரம் ஏறும் தாத்தாவுக்கு உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்! - பனைமரம்

80 வயதைக் கடந்த நிலையிலும் பனை மரம் ஏறி, கரம் பிடித்த தனது மனைவியை காப்பாற்றி வரும் துரைப்பாண்டி தாத்தாவிற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி;  நெல்லையில் 80 வயதில் பனைமரம் ஏறும் தாத்தாவுக்கு  உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Jun 21, 2022, 3:48 PM IST

Updated : Jun 21, 2022, 8:39 PM IST

திருநெல்வேலி: முனைஞ்சிப்பட்டி அடுத்த காரியாண்டி கிராமத்தைச்சேர்ந்தவர், துரைப்பாண்டி தாத்தா (80) இவருக்கு வேலம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருந்தபோதும் தான் ஆசையாக பெற்று வளர்த்த ஒரே மகன் துரைப்பாண்டி, தந்தையை கவனிக்காமல் மதுவுக்கு அடிமையாகி உள்ளார்.

எனவே, தனது மனைவியை காப்பாற்ற வேறுவழியில்லாமல் 80 வயதிலும் தோல் சுருங்கிய உடலுடன் துரைப்பாண்டி தாத்தா பனைமரம் ஏறி குடும்பம் நடத்தி வருகிறார். இவர் தனது 12 வயதில் பனைமரம் ஏற கற்றுக்கொண்டார். தொடர்ந்து குடும்பத்துடன் மும்பையில் 10 ஆண்டுகள் தங்கியிருந்தபோது அங்கேயும் பனைமரம் ஏறும் வேலை பார்த்து வந்துள்ளார்.

தற்போது சொந்த ஊரில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் பனைமரம் ஏறுகிறார். அதன் மூலம் கிடைக்கும் பதநீர், நொங்கு ஆகியவற்றை விற்பனை செய்து குறைந்த வருமானத்தோடு நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்.

வயோதிகம் காரணமாக துரைப்பாண்டிக்கு முதுகில் கூன் விழுந்துள்ளது. இருப்பினும் உழைப்புக்கு வயதும் உடல் நலமும் தடை இல்லை என்பதை இக்காலத்து இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் துரைப்பாண்டி தாத்தா மிக சவாலான பனையேறும் தொழில் செய்துவருகிறார்.

பனை மரம் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல; பிற மரங்களைப் போல் பனைமரம் எளிதில் ஏற முடியாது. அடியிலிருந்து உச்சிவரை சிறாக்கள் (முட்கள்) நிறைந்திருக்கும், இதைப்போல் பனை ஓலையை சுற்றிலும் சிறாக்கள் சூழ்ந்திருக்கும். வயது துரத்திய போதும் பனைத்தொழிலால் தனது வருமானத்தை ஈட்டி வந்த போதிலும்,

நெல்லையில் 80 வயதில் பனைமரம் ஏறும் தாத்தாவுக்கு உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

தனக்கு மட்டுமே அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கி வருவதாகவும், தனது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கினால் அதை வைத்து கடைசி காலத்தை நிம்மதியாக ஓட்டிவிடுவோம், என்று துரைப்பாண்டி தாத்தா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் ”கரம்பிடித்த ஆசை மனைவியைக் காப்பாற்ற 80 வயதில் பனைமரம் ஏறும் தாத்தா”, என்ற தலைப்பில் விரிவான செய்தித் தொகுப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் வெளியான செய்தியை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, உடனடியாக தாத்தாவின் நிலையை அறிந்து கொள்ள திசையன்விளை வட்டாட்சியரை நேரில் அனுப்பி வைத்தார். அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று(ஜூன் 21) தாத்தாவின் மனைவி வேலம்மாளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாத்தாவின் மனைவி வேலம்மாளுக்கு ஓய்வூதிய ஆணை

இதனால் தாத்தா மகிழ்ச்சி அடைந்துள்ளளார். மேலும் செய்தி வெளியான மறுநாளே நடவடிக்கை எடுத்த ஆட்சியரின் செயலுக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்துள்ளது. இதேபோல் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளம் மூலம் தனக்கு மிகப்பெரிய உதவி கிடைத்திருப்பதாக துரைப்பாண்டி தாத்தா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரம் பிடித்த ஆசை மனைவியை காப்பாற்ற 80 வயதிலும் பனை ஏறும் தாத்தா!

Last Updated : Jun 21, 2022, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.