ETV Bharat / state

நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தும் நெல்லை பொறியாளர் - farming

வெளிநாட்டில் செய்த வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த கிராமத்தில் நாட்டு மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் செய்துவரும் நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் ஓம் பிரகாஷ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வெளிநாட்டு வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த கிராமத்தில் மாடு மேய்க்கும் நெல்லை பொறியாளர்

author img

By

Published : May 20, 2022, 8:37 AM IST

Updated : May 24, 2022, 4:19 PM IST

திருநெல்வேலி: உயர்கல்வி படிக்கும் அனைவருக்குமே கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும். அதிலும் சிறிய நகரங்கள் மற்றும் குக்கிராமங்களில் இருந்து உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் சென்னை போன்ற மிகப்பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக கிராமங்களில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் செல்வோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. ஆனால் கரோனா போன்ற பேரிடர் காரணமாகவும் இயந்திர வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு காரணமாகவும் இளைஞர்கள் சொந்த கிராமத்தில் குறைந்த வருமானத்தில் நிறைவான நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பத் தொடங்கிவிட்டனர்.

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்றே கூறலாம். இதுபோன்ற சூழலில் நெல்லையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் லட்சக்கணக்கில் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு, அந்த வேலையை உதறித் தள்ளி தற்போது தனது சொந்த கிராமத்தில் மாடு மேய்த்து வரும் சம்பவம் அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் - பார்வதி தம்பதியின் மகன் ஓம் பிரகாஷ். இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் திருமணமாகி பிரபஞ்சன் என்ற மகன் உள்ளார். ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சவூதி, குவைத் போன்ற வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார். கைநிறைய சம்பளம் வாங்கினாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று எண்ணியுள்ளார். எனவே தனது வெளிநாட்டு வேலையை உதறித் தள்ளிவிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் சொந்த ஊரான சிவந்திபுரத்தில் குடியேறிவிட்டார்.

சொந்த ஊரில் விவசாயம் பார்க்க வேண்டும் என்பது ஓம் பிரகாஷ் லட்சியமாக இருந்துள்ளது. எனவே தனது எண்ணப்படி பாபநாசம் அடுத்த வடமலை சமுத்திரம் என்ற கிராமத்தின் அருகே தான் சம்பாதித்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, அதில் இயற்கையான முறையில் தனது தேவைக்கு விவசாயம் செய்து வருகிறார். அதைவிட குறிப்பாக ஓம் பிரகாஷ் தனது தோட்டத்தில் நாட்டு மாடுகளை வளர்த்து அந்த மாடுகளை அவரே முழுநேரமும் பராமரித்து வருகிறார்.

இதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான தனது தோட்டத்தில் ஓம் பிரகாஷ் மண் மணம் மாறாத மண் வீட்டை ஒன்றையும் அமைத்துள்ளார். அங்கேயே குடியிருந்து, தான் ஆசையாக வளர்த்துவரும் கால்நடைகளைப் பராமரித்து வருகிறார். 30 வயதே ஆன இளைஞரான ஓம் பிரகாஷ் தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தோம் என்ற ஆடம்பரம் துளியும் இன்றி மிகவும் எளிமையாக கையில் கம்புடன் தினமும் காலை தனது மாடுகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கிறார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாடுகளுடன் இருந்து மேய்ச்சலை முடித்துக் கொண்டு மீண்டும் தோட்டத்துக்கு திரும்புகிறார். பின்னர் மாடுகளுக்கு தேவையான உணவுகளை கொடுத்து நாள் முழுவதும் அங்கேயே நேரத்தை செலவிடுகிறார். அழிந்து வரும் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தென்பாண்டி மற்றும் செங்கல்பட்டு குட்டை ஆகிய இரண்டு ரக நாட்டு மாடுகளை மட்டுமே வளர்க்கிறார்.

மேலும் பொருளாதாரத்துக்காக மாட்டு சாணங்களில் இருந்து விபூதி, பல்பொடி, சோப்பு, பிள்ளையார் சிலை போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்கிறார். இதேபோல் சோலார் மின்சாரம், மாட்டு சாணத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி, கோழி வளர்ப்பு, பண்ணை வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் என இயற்கை சார்ந்த பல்வேறு விஷயங்களில் ஓம் பிரகாஷ் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, "வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் ஏதோ ஒன்றை தொலைத்தது போன்று நினைத்தேன். எனவே சொந்த ஊருக்கு திரும்பி இயற்கை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் நிறைவு கிடைக்கவில்லை. எனவே வாழ்வு முழுவதையும் இயற்கையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்தமாக நிலம் வாங்கி தற்போது ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறேன்.

நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தும் நெல்லை பொறியாளர்

வெறும் பயிர்களை மட்டும் வளர்த்தால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இங்கு செலவிட முடியும். எனவே கால்நடைகள் வளர்த்தால் தான் முழு நேரமும் இந்த வாழ்வியலில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என எண்ணினேன். என்னுடன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் தொலைபேசியில் மணிக்கணக்கில் குடும்பத்துடன் பேசுவார்கள். ஆனாலும் அதில் ஒரு நிறைவு ஏற்படாது. தற்போது நான் சொந்த கிராமத்தில் எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்கிறேன்.

நாட்டு மாடுகளை வளர்ப்பதால் அதிக பாலும் கிடைக்காது வருமானமும் வராது என ஆரம்பத்தில் பலர் என்னை கேலி செய்தார்கள். அந்த எண்ணத்தை மாற்றவே சாணத்திலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களான விபூதி, பல்பொடி, இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கினேன்.

தற்போது என்னை பின் தொடர்ந்து பலரும் இதுபோன்ற இயற்கை வாழ்வியலை விரும்புகின்றனர். என்னை போன்று மாடு மேய்ப்பவர்களுக்கு மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிக்கப்படுவது பெரும் வேதனையாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் கல்லூரிகள் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். எனவே அவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

காலம் போகிற வேகத்தில் வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினோமா.. சொந்த ஊர் திரும்பினோமா.. ஆடம்பர வீடுகளை கட்டி குடும்பத்துடன் குஷியாக வாழ்ந்தோமா.. என்று எண்ணும் இளைஞர்களுக்கு மத்தியில், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை சொந்த ஊரில் இயற்கை வாழ்வியலுக்காக செலவிடும் நெல்லை பொறியாளரின் இந்த செயல் பாராட்டுக்குரியதே.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை - திகில் கிளப்பும் திருச்சி வேலுச்சாமி

Last Updated : May 24, 2022, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.