ETV Bharat / state

நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்! - திருநெல்வேலி கனமழை

Nellai Corporation: நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி நேரம் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கியது.

நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 12:10 PM IST

நெல்லை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

திருநெல்வேலி: நெல்லை மாநகரப் பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டட வேலைகளால் ஏற்பட்ட கழிவுகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கழிவுநீரை கால்வாயில் கொட்டக்கூடாது. அவ்வாறு உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாங்களாகவே 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் அல்லது மாநகராட்சியால் அகற்றப்படும்.

இவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் திருப்பி தரப்பட மாட்டாது எனவும், மேலும் ஆக்கிரப்பு அகற்றுவதற்கான செலவுகளையும் அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் நேற்றைய முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், நேற்று (ஜன.4) திருநெல்வேலி மாநகரப் பகுதியான வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் தொடங்கினர்.

மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைகள், கடைகளில் உள்ள மேற்கூரைகள், விளம்பரப் பலகைகள் என அனைத்தையும் அகற்றினர். மேலும், தனியார் நிறுவனத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரை உடனடியாக அகற்ற வலியுறுத்தியதோடு, அவற்றுக்கு அபராதத் தொகையும் விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து நெல்லையப்பர் நெடுஞ்சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். வருகிற 31ஆம் தேதி வரை இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த கனமழையினால், மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீர் வடிய தாமதமானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.