ETV Bharat / state

வாடிக்கையாக தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் பைக்… நெல்லையில் மற்றொரு சம்பவம்! - tirunelveli

நெல்லையில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிக்கையாக தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் பைக்…நெல்லையில் இன்னொரு சம்பவம்

author img

By

Published : Jun 1, 2022, 11:57 AM IST

நெல்லை: கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர். வயது 42. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துவருகிறார். இவர் பேட்டரி வாகனத்தை பயன்படுத்திவருகிறார். இந்நிலையில் இன்று (ஜூன்1) காலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசீர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் பைக்கிலிருந்து தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

வாடிக்கையாக தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் பைக்…நெல்லையில் இன்னொரு சம்பவம்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பேட்டரி வண்டியின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் ஆங்காங்கே பேட்டரி பைக் எரிந்து வரும் நிலையில் கொண்டா நகரத்திலும் பேட்டரி பைக் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.