திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைதளம் மூலம் தவறான தகவலை பரப்பி மோசடி நடைபெறுவதாக மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் எச்சரித்துள்ளார்.
அதாவது நெல்லையைச் சேர்ந்த சிலரது செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு அரசு ஆன்லைன் வகுப்புக்காக இலவச லேப்டாப் வழங்குவதாகவும், அதற்காக தங்களது விவரங்களை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் பதிவு செய்யவும் என்று அந்த குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இணையதளத்தில் சென்று பார்த்தபோது மாணவர்களின் ஆதார் நம்பர் பான் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கேட்பதாக துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை ஆன்லைன் மூலம் இலவச லேப்டாப் வழங்குவதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே நெல்லை மாவட்ட பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க...12ஆம் வகுப்பு மறுதேர்வர்களின் முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியாகும் - சிபிஎஸ்இ