ETV Bharat / state

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்!

author img

By

Published : May 8, 2021, 5:45 PM IST

திருநெல்வேலி: அதிக நெரிசல் மிகுந்த நகர் பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக, கரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகப் பரவி வருகிறது. ஒருநாளுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மகேந்திரகிரி இஸ்ரோவில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த அலுவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழுவினர் வடிவமைத்துள்ள இந்த ட்ரோன் மூலம் வானில் பறந்தபடி கிருமிநாசினி தெளிக்கப்படும். அதிக நெரிசல் மிகுந்த நகர் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாததால் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர் குழுவினர் பிரத்யேக ட்ரோன்களை தயாரித்துள்ளனர். பெட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், 16 லிட்டர் கிருமிநாசினியை வான் வழியாக தெளிக்கும் திறன் கொண்டது.

ட்ரோன் மூலம் வான் வழியாகத் தெளிக்கப்படும் கிருமி நாசினியால் கரோனா வைரஸ் எளிதில் அழிந்து விடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் என்ஜிஓ காலனி பகுதியில் இந்த ட்ரோன் பயன்பாடு இன்று தொடங்கப்பட்டது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேற்கொள்ளப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வருவதாக கரோனா தடுப்பு பணி கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ’மத்திய அரசின் கொள்கையின்படி ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தேவை அதிகமாக இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இருப்பினும் தேவைக்கேற்ப பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளித்து வருகின்றனர். தற்போதைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆகவே, நிலைமையை சமாளித்து விடலாம்’என்றார்.

இதையும் படிங்க:காலி படுக்கைகள் விவரத்தை அறிய புதிய வலைதள முகவரி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.