ஊரடங்கு காரணமாக தொழில்கள் நடைபெறாததால் ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பொதுமக்களுக்குப் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துதவித்த மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஊரடங்கால் தவித்துவந்த தங்களுக்கு திமுக சார்பில் உதவிகள் வழங்கியதற்கு, நன்றி தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வறுமையில் வாடிய குடும்பங்களுக்கு நிவராணம் வழங்கிய ஊராட்சி நிர்வாகம்