திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று (ஏப்.11) மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் ராஜூ ஆணையர் விஷ்ணு சந்திரன் மற்றும் மண்டல குழு தலைவர்கள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தநிலையில், கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திமுக உறுப்பினர் உலகநாதன் எழுந்து நின்று கோரிக்கை ஒன்றை மேயரிடம் முன் வைத்தார். அவர் பேசும்போது மாநகராட்சியின் குப்பை வண்டியில் மகாத்மா காந்தியின் படம் வைத்துள்ளனர்.
அவர் ஒரு மாபெரும் தலைவர் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர் எனவே குப்பை வண்டியில் அவர் படத்தை எடுத்துவிட்டு தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தவர் படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதாவது காந்தி படத்தை எடுத்து விட்டு பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று மறைமுகமாக மேயரிடம் உறுப்பினர் உலகநாதன் கோரிக்கை வைத்தார்.
திமுக உறுப்பினர் உலகநாதன் இந்திய அளவில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தில் மகாத்மா காந்தியின் படத்தை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: வீடியோ காலில் வெட்டிப் பேச்சு; சர்ச்சையில் சிக்கிய திமுக கவுன்சிலர்!