ETV Bharat / state

’வெங்காயத்தைத் திருடி சட்டைக்குள் பதுக்கும் சுமை தூக்கும் தொழிலாளி’: சிசிடிவி காட்சி.!

author img

By

Published : Oct 22, 2020, 6:26 AM IST

திருநெல்வேலி: நயினார்குளம் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் மூட்டைகளில் இருந்து வெங்காயத்தைத் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

video-goes-viral
சட்டைக்குள் பதுக்கும் சுமை தூக்கும் தொழிலாளி

வழக்கமாக விற்பனையாகும் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் 50 முதல் 80 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

நாடு முழுவதும் விளைச்சல் குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறி சந்தையில் வெங்காய மூட்டைகளை இறக்கிய சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் யாருக்கும் தெரியாமல் மூட்டைகளிலிருந்து வெங்காயத்தை எடுத்து தனது சட்டைப்பையில் போடுவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

லாரியின் மேலே நின்று மூட்டையை இறக்கும் தொழிலாளி யாரும் இல்லாத சமயத்தில் மூட்டையில் உள்ள ஓட்டை வழியாக வெங்காயத்தை எடுத்து தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்கிறார். அவ்வப்போது யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிடுகிறார். சுமார் இரண்டு கிலோ அளவுக்கு வெங்காயத்தை திருடுவது போன்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது. வெங்காயத்தின் விலை 100 ரூபாய் ஆன நிலையில், சுமைத் தூக்கும் தொழிலாளி வெங்காயத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான சிசிடிவி காட்சி

இது குறித்து நயினார்குளம் காய்கறி சந்தை நிர்வாகி செல்வகுமாரிடம் கேட்டபோது, ”அந்த தொழிலாளி யார் என்ற விவரம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் மூட்டைகளில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழும் வெங்காயத்தை தான் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. நாளை அவரை நேரில் அழைத்து கண்டிக்கவுள்ளோம். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்”என்றார்.

இதையும் படிங்க:கண்ணீர் வரவழைத்த வெங்காய விலை; இறக்குமதிக்கு தளர்வளித்த மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.