திருநெல்வேலி: யூடியூபர் மாரிதாஸ் அவதூறாக பேசியது உள்பட மொத்தம் 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இருப்பினும் மற்றொரு வழக்கில் தொடர்ந்து மாரிதாஸ் சிறையில் உள்ளார். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில மீரான் என்பவர் கடந்த ஆண்டு அளித்த புகாரில் தற்போது மாரிதாஸ் மீது 292A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜேஎம்-5ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை டிசம்பர் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் ஜாமின் அளிக்கக்கோரி மாரிதாஸ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்