கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கடுமையாக்கும் விதமாக நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையினர் ஒரு தீர்வை முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் கூறுகையில், “திருநெல்வேலி மாநகர பகுதியில் அத்தியாவசிய பணி செய்யும் நபர்களின் 4 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற 4 சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களில் 2 கிலோமீட்டர் சுற்றுளவுக்குள் மட்டுமே காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை செல்லலாம். 1 மணிக்கு பின்னர் எந்த அத்தியாவசிய தேவையில்லாத 2 சக்கர வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இந்த தடையை மீறுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இதுவரை திருநெல்வேலி மாநகரில் 550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்துவருகிறது. மாநகரத்தில் 2400 தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர் மன்றத்தினரும் தன்னார்வலர் பணி செய்ய காவல்துறையினருடன் கைகோர்த்துள்ளனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!