திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ வைரஸ் (தீநுண்மி) பரவல் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவிவருகிறது. அதன்படி ஜூன் 17ஆம் தேதி 28 பேருக்கும், ஜூன் 18ஆம் தேதி 2 வயது சிறுமி உள்பட 26 பேருக்கும் தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து கட்டுமான பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் மூன்று பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. அலுவலக வளாகத்தில் நான்கு பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டு, அவைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதையும் படிங்க: நெல்லையில் பிரபல கடைகள் மூடல் - மாநகராட்சி அதிரடி