திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ஞானதிரவியத்திற்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாததால் இரண்டு பேரும் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். பின்னர், இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து இருவரும் இன்று (ஆக.28) திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சர்வீஸ் (KIMS) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞானதிரவியம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதால், அதன் மூலம் தொற்று பரவியதா? அல்லது வேறு ஏதேனும் வழிகளில் தொற்று ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், தற்போது முதல் நபராக திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பூரண நலம்!