நெல்லை சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கிழ் உள்ள தெருவானது மக்கள் போக்குவரத்து மிகுந்த இடமாகும். இங்கு பிரசித்திப் பெற்ற சாலைகுமரன் கோயில் அமைந்துள்ளது.
நேற்று (மே 22) இரவு கோயிலுக்கு இரு புறமும் அமைந்துள்ள கடைகளில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். தொடர்ந்து எலக்ட்ரிகள் கடை, பூக்கடை, டீ கடை, மோட்டார் கடை, வாட்ச் கடை உள்ளிட்ட 10 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சந்திப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... பூ வியாபாரியை ஏடிஎம் கொள்ளையனாக மாற்றிய ஊரடங்கு!