ETV Bharat / state

இருதரப்பினரிடையே மோதல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

இருதரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இளைஞரை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Jun 17, 2021, 11:41 AM IST

crime news  thirunelveli news  thirunelveli latest news  Conflict between the two sides  youth attempt murder  திருநெல்வேலி செய்திகள்  திருநெல்வேலி இருதரப்பினரிடையே மோதல்  இளைஞருக்கு அரிவாள் வெட்டு  போராட்டம்  இருதரப்பினரிடையே மோதல்  மோதல்
இருதரப்பினரிடையே மோதல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு-நீடித்து வரும் போராட்டம்

திருநெல்வேலி: முன்னீர் பள்ளம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, மருதநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன் என்ற பால முகேஷை சிலர் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த பாலமுகேஷ், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இது தொடர்பாக பால முகேஷ் தரப்பினர் பதிலுக்கு எதிர் தரப்பினரிடம் தகராறு ஈடுபட்டனர். இதனால் நேற்று (ஜூன் 16) இரவு இருதரப்பு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்களை ஒரு தரப்பினர் சேதப்படுத்தினர். அதற்கு மற்றொரு தரப்பினர் வீடுகளுக்குள் கல்லெறிந்துதனர்.

இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த வைக்கோல் படப்புக்குத் தீவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தின்போது ஒரு தரப்பினர், மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் ராஜ ராஜன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதால் இரவு முழுதும் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாதுகாப்புப் பணிகளை ஆய்வுசெய்து, அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பால முகேஷ் வெட்டப்பட்ட சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும்வகையில், அவரது ஆதரவாளர்கள் எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அங்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.