ETV Bharat / state

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் - திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர்

நான் முதல்வன் திட்டத்தில் அடுத்தகட்டமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் இன்னோசனட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் - திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர்
நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் - திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர்
author img

By

Published : Sep 16, 2022, 11:02 AM IST

திருநெல்வேலி: தொழில் கல்வி பயிலும் மாணவர்களை தகுதியான வேலை வாய்ப்புகளுக்கு அவர்களை திறன்மிகு மாணவர்களாக உருவாக்கும் ”நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்தது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டம், திட்டத்தின் நோக்கம் ஆகியவை குறித்து பேசினார் . இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 58 அரசு. அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் முதல்வன் திட்டம் முதல்வரின் கனவு திட்டம், இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 468 பொறியியல் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களை சந்தித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்படுவார்கள் - திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர்

இந்த கருத்தரங்கம் அடுத்ததாக சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 29- ந்தேதி முதல்வர் நான் முதல்வர் இணைய தளத்தை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து பொறியில் கல்லூரி மாணவர்களையும் கொண்டு வந்துள்ளோம். இணைய தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலவச பாடதிட்டங்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டாய பாடதிட்டங்களும் உள்ளது.

இதுகுறித்து தெரிந்து கொள்ளும் வகையில் வரும் 19- ந்தேதி முதல் கல்லூரி பேராசிரியர்கள் 7,700 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும் இணைய தளத்தில் 150 தொழில் நிறுவனங்கள் உள்ளது, ஆன்லைன் வகுப்புகளும், வளாக வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

1 லட்சத்து 79 ஆயிரம் பேருக்கு இணைய அழைப்பு விடுக்கப்படுள்ள நிலையில் 30 சதவீதம் பேருக்கு மேல் இணைந்து பயன்பெற தொடங்கி விட்டனர். பொறியியல் மாணவர்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக நான் முதல்வன் திட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைக்கப்படுகிறார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநரால் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.