நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள துரை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (16). இவரும், இவரது அண்ணன் ஆக்னலும், உவரி கடல் பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் அலை வேகமாக அடித்ததில் சிக்கி இரண்டு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து கூடங்குளம் கடலோரக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அங்குள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றுவிட்டு கடலில் குளித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. கடல் அலையில் மூழ்கி, கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை அருகே ரவுடி வெட்டிக்கொலை