ETV Bharat / state

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்! - thirunelveli issue

திருநெல்வேலியில் கத்தியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
author img

By

Published : Apr 23, 2022, 1:55 PM IST

திருநெல்வேலி: நெல்லையில் தாக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தாக்குதல் நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் தெரசா.

CM Stalin made Telephonic Conversation with Tirunelveli SI
காயமுற்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா

இவர் நேற்றிரவு (ஏப். 22) சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் உதவி ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

  • திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.

    தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

    — M.K.Stalin (@mkstalin) April 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.