திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சந்திப்பு பேருந்து நிலைய பகுதி, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சி.என்.கிராமம், கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுக் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் பாதிப்படைந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், ஆங்காங்கே குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், குளங்களும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களைச் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்யத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில், மத்தியக் குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். இந்த குழுவில் சாலைப்போக்குவரத்து துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, நிதித்துறை துணை இயக்குநர் ரெங்கநாத் ஆதம், ஹைதராபாத்திலுள்ள மத்திய வேளாண் இயக்குநர் முனைவர் கே.பொன்னுசாமி, மின்சார துறை துணை இயக்குநர் ராஜேஸ்திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் முதலாவதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு வீடியோ காட்சிகளைப் பார்த்தனர்.
பின்னர், ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாச்சியர் அலுவலகம், மழையில் நனைந்த கோப்புகள் மற்றும் தளவாடப் பொருட்கள், ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
-
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் அவர்கள் தலைமையில் ஒன்றிய குழு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு துறைசார்ந்த அலுவலர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.#Nellai pic.twitter.com/OrSCEuJZik
— District Collector, Tirunelveli (@Collectortnv) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் அவர்கள் தலைமையில் ஒன்றிய குழு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு துறைசார்ந்த அலுவலர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.#Nellai pic.twitter.com/OrSCEuJZik
— District Collector, Tirunelveli (@Collectortnv) December 21, 2023திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் அவர்கள் தலைமையில் ஒன்றிய குழு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு துறைசார்ந்த அலுவலர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.#Nellai pic.twitter.com/OrSCEuJZik
— District Collector, Tirunelveli (@Collectortnv) December 21, 2023
தொடர்ந்து கொக்கிரக்குளம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு அதன் நீர்வரத்து ஆகியவற்றை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையப் பகுதிகள், டவுண் காட்சி மண்டபம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்த வீடு, கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடமும் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர்.
முன்னதாக, திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நிவாரணப் பொருட்கள் முறையாக வரவு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறதா என்பதையும், பார்வையிட்டு அங்கு பணியிலிருந்த அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். மேலும், மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பல இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை!