ETV Bharat / state

தொற்று பாதித்தவர்களின் குழந்தைகளை பாதுகாக்க மையம்! - Tirunelveli district news

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் நெல்லையில் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளது.

center-in-nellai-to-protect-children-of-covid-patients
தொற்று பாதித்தவர்களின் குழந்தைகளை பாதுகாக்க நெல்லையில் மையம்!
author img

By

Published : May 17, 2021, 3:49 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் நெல்லை சந்திப்பில் இயங்கி வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர், அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இங்கு வைத்து பராமரிக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக இதுபோன்று தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிக்கும் மையம் நெல்லையில் தொடங்கப்பட உள்ளது.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "நெல்லை மாவட்டத்தில் கரனாநோய்த் தொற்று குறையும் என்று நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டுள்ளோம். ஆக்சிஜன் தேவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். நெல்லையில் கரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் குழந்தகளை இந்த மையத்தில் பராமரிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்தும் ஆய்வு செய்துள்ளோம்.

தொற்று பாதித்தவர்களின் குழந்தைகளை பாதுகாக்க நெல்லையில் மையம்!

ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய வெப்ப நிலையை அடைய வேண்டும். எனவே, வெப்ப நிலையை உயர்த்த வேண்டிய பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் ரூர்கேலாவில் இருந்து ஐந்து டிரக்குகளில் தூத்துக்குடிக்கு ஆக்சிஜன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: ஒரு கோடி ரூபாய் வழங்கிய அதிமுக

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.