ETV Bharat / state

வாளால் கேக் வெட்டிக் கொண்டாட்டம்: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு - The case against the professor who cut the cake with the sword

திருநெல்வேலி: அரசு சட்டக் கல்லூரியில் வாளால் கேக் வெட்டிக் கொண்டாடிய கல்லூரி பேராசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாளால் கேக் வெட்டிய பேராசிரியர் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி சட்டக் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு  சட்டக் கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு  வாளால் கேக் வெட்டும் கலாச்சாரம்  Case filed against Tirunelveli Law College Professor  The case against the professor who cut the cake with the sword  Cake cutting culture by the sword
Cake cutting culture by the sword
author img

By

Published : Mar 31, 2021, 1:45 PM IST

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் பாரதி. இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் வைத்துக் கொண்டாடியுள்ளார்.

அப்போது, பெரிய வாளைக் கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடியதோடு வாளுடன் பல்வேறு விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலான நிலையில் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இது குறித்து முன்னதாகப் புகார் வந்தது.

வாளை வைத்து போஸ் கொடுக்கும் பேராசிரியர்

அதனடிப்படையில், பாளையங்கோட்டை காவல் துறையினர் தற்காலிகப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி மீது ஆயுதங்கள் பயன்படுத்துதல், பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடரும் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டும் கலாசாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.