ETV Bharat / state

சிசிடிவி:இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி அதிர்ஷ்டவசமாக குழந்தை உள்பட 3 பேர் உயிர் தப்பினர்! - பேருந்து மோதி

நெல்லையில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 3 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பேருந்துக்கு அடியில் சிக்கியதையடுத்து அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Oct 18, 2022, 10:13 PM IST

நெல்லை: அருகே பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (45) அவரது உறவுக்கார பெண் தங்கம் மற்றும் தங்கத்தின் 3 வயது மகன் ஆதி ரூபன் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று ராமகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் குழந்தை உள்பட மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இருசக்கர வாகனமும் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டது. பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் அருகில் மூன்று பேரும் மாட்டிக் கொண்டனர் அதிர்ஷ்டவசமாகச் சக்கரத்திற்குள் சிக்காததால் மூன்று பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

விபத்தில் ராமகிருஷ்ணன் உட்பட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டு அவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நெல்லையில் மற்றொரு விபத்து: இதற்கிடையில் இந்த விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் பிரதான சாலையில் மற்றொரு தனியார் பேருந்து மின்னல் வேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் மோதியதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற விளாகம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தலையில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் அவர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லையில் அடுத்தடுத்து இரண்டு தனியார் பேருந்துகள் விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவக்கல்லூரி அருகே நடைபெற்ற விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் குழந்தை உட்பட 3 பேரும் பேருந்துக்கு அடியில் தவறி விழும் பதறவைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே நெல்லை மாநகரப் பகுதியில் தனியார் பேருந்துகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். பேருந்து ஓட்டுநர்கள் வசூலை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்கின்றனர்.

குறிப்பாகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம் சந்திப்பு போன்ற பகுதியில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. எனவே மாநகர காவல்துறை தனியார் பேருந்துகளைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.