ETV Bharat / state

தென்காசியில் காவல் துறையினர் தேர்தல் விழிப்புணர்வு!

நெல்லை: காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து தென்காசி நகரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். அவர்களுடன், கண்களைக் கட்டிக்கொண்டு எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் திறமைகொண்ட சிறுவனும் பேரணியில் கலந்துகொண்டான்.

tenkasi-election-rally
author img

By

Published : Apr 15, 2019, 10:26 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று தென்காசியில் நடைபெற்றது. இந்தப் பேரணி தென்காசி ஆய்வாளர் கே.ஆடிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துறையினர் மற்றும் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த துணை ராணுவத்தினர் கலந்துகொண்டு நகரில் ஊர்வலமாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதில் ஒரு பகுதியாக கடையநல்லூரைச் சேர்ந்த உதயகுமார் என்ற சிறுவன் கண்களை கட்டிக்கொண்டு எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் அசாத்திய திறமை சூப்பர் பிரைன் யோகா மூலம் கற்றுக்கொண்டான். அதன்மூலம் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் மற்றும் காசு வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக காவல் துறையினருடன் இணைந்து பேரணியில் ஈடுபட்டான்.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவனிடம் ரூபாய் நோட்டுகள், ஆதார் அட்டை போன்றவற்றை கொடுத்து சோதித்து பார்த்தனர். ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள் மற்றும் பெயர் முதற்கொண்டு கூறி அசத்தினான் அந்தச் சிறுவன். பின்பு தென்காசி பெரிய கோவிலிலிருந்து காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

தென்காசியில் காவல் துறையினர் தேர்தல் விழிப்புணர்வு

Intro:கண்களைக் கட்டிக்கொண்டு எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் அபார சிறுவன் !!! தென்காசி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தோடு இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது !

Body:வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓட்டளிப்பது முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று தென்காசியில் நடைபெற்றது இது தென்காசி ஆய்வாளர் திரு ஆடிவேல் அவர்கள் தலைமையில் தென்காசி காவல்துறையினர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த துணை ராணுவத்தினர் கலந்துகொண்டு தென்காசி நகரில் ஊர்வலமாக விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இதில் ஒரு பகுதியாக கடையநல்லூரை சேர்ந்த சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிக்கும் அசாத்திய திறமை சூப்பர் பிரைன் யோகா மூலம் பொதுமக்களுக்கு ஓட்டளிப்பதில் அவசியம் மற்றும் காசு வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் காவல்துறையினருடன் இணைந்து பேரணியில் ஈடுபட்டான் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவனிடம் ரூபாய் நோட்டுகள் ஆதார் அட்டை போன்றவற்றை கொடுத்து சோதித்து பார்த்தனர் ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள் மற்றும் பெயர் முதற்கொண்டு கூறி அனைவரையும் அசத்தினார் பின்பு தென்காசி பெரிய கோவிலில் இருந்து காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்

Conclusion:பேட்டி
உதயகுமார்
மாணவன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.