ETV Bharat / state

நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு - nellai quarry accident

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சி இருந்த உடல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் நிறைவடைந்தது.

நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு

author img

By

Published : May 23, 2022, 10:36 AM IST

Updated : May 23, 2022, 11:40 AM IST

திருநெல்வேலி: பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14ஆம்தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் மறுநாள் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாலையில் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இரண்டாம் நாள் 16ஆம் தேதி காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடத் தொடங்கிய நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் அன்று இரவு முருகன் (லாரி கிளீனர்) சடலமாக மீட்கப்பட்டார். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. தொடர்ந்து 17ஆம் தேதி மதியம் ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் அடையாளம் காணப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருந்ததாலும், இரவில் மீண்டும் சிறிய அளவில் பாறை சரிவு ஏற்பட்டதாலும், மூன்றாம் நாள் மீட்புப்பணிகள் நள்ளிரவில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 18ஆம் தேதி மதியம் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு மாலை 6.45 மணிக்கு 5வது நபர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் செல்வகுமார் என உறுதி செய்த பின் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து 19ம் தேதி தொடங்கி நேற்று இரவு வரை தொடர்ந்து 4 நாட்கள் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பாறைகள் கடினமாக இருந்ததால் உடைப்பதற்காக ஐந்து முறை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. இதனால் 8ம் நாளாக நடந்த மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.பின் பாறை குவியலுக்குள் சிக்கி இருந்த ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது

இதன்மூலம் கல்குவாரியில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து விதி மீறி செயல்பட்ட இந்த கல்குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாகவும் அதன் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குவாரி விபத்து - தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் கைது!

Last Updated : May 23, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.