ETV Bharat / state

'பாஜகவும் பொங்கல் விழாவும்' தொடரும் சொதப்பல்களால் சோகத்தில் நிர்வாகிகள்! - Thermacol pongal at madurai

திருநெல்வேலி: அடைமழை காரணமாக, நெல்லையில் பாஜக ஏற்பாடு செய்திருந்த பொங்கல் பண்டிகை விழா சொதப்பலானது.

திருநெல்வேலி
திருநெல்வேலி
author img

By

Published : Jan 10, 2021, 10:35 PM IST

தமிழ்நாடு பாஜக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு "நம்ம ஊர் பொங்கல்" என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.

'தெர்மாகோல் பொங்கல்'

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொங்கல் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார் ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு பானையில் மட்டும் நிஜமாக தீவைத்து பொங்கல் வைத்தனர். மீதமிருந்த அனைத்து பொங்கல் பானைகளிலும் தீ வைக்காமல் தெர்மாகோல் கொண்டு பொங்கல் பொங்குது போன்று செட்டப் செய்தனர். இதைப் பார்த்து பொதுமக்கள் முகம் சுளித்தனர். சமூக வலைதளங்களிலும் பாஜகவின் இந்த பொங்கல் நிகழ்ச்சி வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடரும் பொங்கல் சொதப்பல்

இந்நிலையில், மதுரையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் பாஜகவினரின் பொங்கல் நிகழ்ச்சி சொதப்பியுள்ளது. நெல்லை மாவட்ட பாஜக சார்பில் பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணியளவில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நெல்லையில் இன்று அதிகாலை முதல் தற்போது வரை அடை மழை பெய்து வருவதால் பொங்கல் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட அனைத்து பானைகளும், பனை ஓலைகளும் தண்ணீரில் நனைந்து வீணாகிப் போனது.

கடந்த சில தினங்களாகவே நெல்லையில் தினமும் மாலை வேளையில் மிதமான மழை பெய்து வருவதை நன்கு அறிந்தும் கூட நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட பாஜகவினர் செய்ய தவறி இருந்தனர். குறிப்பாக மேடையில் கூட பந்தல் அமைக்காததால் மழையால் எங்கு பார்த்தாலும் சேறும் சகதியாக காட்சியளித்தது.

எல் முருகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இதற்கிடையில் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து நெல்லை வந்த எல் முருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அடை பொங்கல் நிகழ்ச்சி சொதப்பிய தகவலை நிர்வாகிகள் அவரிடடம் தெரிவித்தனர். மழையும் ஓயாமல் பெய்து வந்ததால் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் எல்.முருகன் தங்கியிருந்தார். சில மணி நேரம் அவர் அங்கேயே ஓய்வெடுத்த நிலையில், தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்ததால், அவசரஅவசரமாக பொங்கல் நிகழ்ச்சி அருகிலுள்ள மண்டபத்திற்கு மாற்றப்பட்டது ஆனால் மண்டபத்துக்குள் ஓலையை வைத்து தீ மூட்ட முடியாது என்பதால் கேஸ் அடுப்பு கொண்டு பொங்கல் வைக்க முடிவு செய்தனர். மண்பானை என்பதால் அந்த முடிவும் கைவிடப்பட்டது.

ஒருகட்டத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வை ரத்து செய்து விட்டு கலை நிகழ்ச்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து எல் முருகன் மண்டபத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.

எனக்கு பொங்கல் வைக்கனும்

பொங்கல் நிகழ்ச்சி என்று பெயர் வைத்துக்கொண்டு பொங்கல் வைக்காமல் இருந்தால் விமர்சனம் ஆகிவிடும் என்று எண்ணிய எல்.முருகன், எப்படியாவது பொங்கல் வைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார் இதையடுத்து அவசர அவசரமாக கலைநிகழ்ச்சிகள் முடிந்தபிறகு சாமியானா பந்தல் அமைத்து அதன்கீழ் தீமூட்டி பொங்கல் வைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.