நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நெல்லை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் குமரேச சீனிவாசன் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இன்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த குமரேச சீனிவாசனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.