ETV Bharat / state

பாஜகவுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாஜகவுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கொடை விழா
கொடை விழா
author img

By

Published : Aug 16, 2022, 7:56 PM IST

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோயிலில் ஆடி மாத கொடை விழா இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றும் மாநில அரசு மத்திய அரசோடு ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வாக்களித்த மக்களுக்கு இழப்பாக அமையும் என்றார்.

கொடை விழா

மதுரை பாஜக மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணனுக்கு திமுகவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்
ஏற்கனவே டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. அமைச்சர் வாகனங்களில் தாக்குதல் நடந்த சம்பவத்தால் தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் என்பதை காரணமாக சொல்ல முடியாது.

நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு செல்கிறார் என்று நான் அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலம் தொட்டு சொல்லிவருகிறார்கள் எந்த எண்ணத்தில் நான் திமுகவிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை. கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான் என்றும் கூறினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் கலந்து கொண்டு நட்புறவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகவும் இதனை வைத்து திமுக பாஜகவுடன் நெருங்கிறது என சொல்லமுடியாது.

ஆளுநர் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பாஜக திமுகவுடன் இருந்து விலகி உள்ளது எனவும் சொல்ல முடியாது பாஜக மத்திய அரசு, திமுக மாநில அரசு அவ்வளவுதான். மீண்டும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார்.

எப்போதும் பாரதிய ஜனதா கட்சி ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. எங்களுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி ஈபிஎஸ் ஆக இருந்தாலும் சரி அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்

இதையும் படிங்க: சென்னையில் மழைக்காலத்திற்குள் வடிகால் பணிகள் 70% நிறைவு பெறும் ... அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.