கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதன்படி சலூன் கடை நடத்திவந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருவதால், திருநெல்வேலி மாவட்ட சலூன் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட சலூன் தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் அவர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக 50 நாள்களுக்கும் மேலாக சலூன் கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா ஒரு லட்சம் ரூபாய் கடனும் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு தளர்வில் எங்களுக்கு கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பாக பணி செய்கிறோம்; அனுமதி வேண்டி காத்துக்கிடக்கும் சலூன்கள்!