தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலகரம் பேரூராட்சி பகுதியில் அரசுக்குச் சொந்தமான 38 ஏக்கர் நிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், நகரச் செயலாளர் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைக்கக்கூடாது என்று பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆயிரபேரி பாதுகாப்பில்லாதது என்றும்; ஊர் மக்கள் பற்றி அவதூறாக திமுக மாவட்டச் செயலாளர் பேசி வருவது கண்டனத்துக்குரியது என்றும் கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே எடுத்த முடிவின்படி மேலகரம் பேரூராட்சிப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆயிரபேரி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'பொல்லாதவன்' நடிகைக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்!