நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் முல்லை நகரைச் சேர்ந்த இளைஞர் பாலமுகேஷ். இவர் நேற்று மாலையில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் முன்விரோதம் காரணமாக குளித்துக்கொண்டிருந்த பாலமுகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயத்துடன் பாலமுகேஷ் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பாலமுகேஷின் உறவினர்கள் வெட்டியவர்களைக் கைது செய்யக்கோரி முன்னீர்பள்ளம் காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.