ETV Bharat / state

சாம்பல் புதன்: பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை - ash wednesday special mass

திருநெல்வேலி: கிறிஸ்தவர்களின் புனித தவக்காலமாக கருதப்படும் சாம்பல் புதனான இன்று (பிப். 17) பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையுடன் வழிபாடு தொடங்கியது.

ash Wednesday special mass at palayamkottai church

author img

By

Published : Feb 17, 2021, 2:42 PM IST

ஏசு கிறிஸ்து உயிர்த்த தினத்தை கிறிஸ்தவ மக்கள் 40 நாள்கள் தவக்கால விரதமிருந்து அசைவம் ஆடம்பர செலவுகள் ஆகியவற்றை தவிர்த்து, சிலுவைபாடு நடைபயணம் மேற்கொள்வார்கள். மேலும் ஏழைகளுக்கு உதவிசெய்து இறைவனை வழிபடுவார்கள். அதன் தொடக்க நாளாக சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படுகிறது. 40 நாள்கள் தவக்கால வழிபாட்டை சிறப்பு பிரார்த்தனையுடன் கிறிஸ்தவர்கள் தங்களது ஆலயங்களில் தொடங்கினர்.

அதன்படி நெல்லையில் உள்ள பழமையான தேவாலயமான பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. இந்தச் சிறப்பு திருப்பலியில் ஆயர் இறையுரையாற்றிய பின்னர், வழிபாட்டில் கலந்துகொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு சாம்பலால் சிலுவையிட்டு அவர்களை தவக்காலத்திற்கு ஆயத்தப்படுத்தி ஆசீர்வாதம் செய்தார். திருப்பலியில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தவக்கால விரதத்தை தொடங்கினர்.

இதையும் படிங்க: வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் தொழுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.