ETV Bharat / state

“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திமுகவுடன் ஏன் கூட்டணியில் சேரக்கூடாது?” - ஜான் பாண்டியன் கேள்வி!

John Pandian about alliance: தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், திமுகவுடன் ஏன் கூட்டணியில் சேரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜான்பாண்டியன் கேள்வி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திமுகவுடன் ஏன் கூட்டணியில் சேரக்கூடாது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 1:51 PM IST

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திமுகவுடன் ஏன் கூட்டணியில் சேரக்கூடாது

திருநெல்வேலி: தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜக உடனும், அதிமுகவுடனும் கூட்டணியில் இல்லை என்றும், திமுகவுடன் ஏன் கூட்டணியில் சேரக்கூடாது என்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இல்லத்தில், அக்கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மற்றும் இளைஞர்கள் எவ்விதமான முன் விரோதமும் இல்லாமல் கொலை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: “2026-இல் திமுக எனும் அரக்கனை பொதுமக்கள் அழித்துவிடுவர்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இந்த கொலை தொடர்பான உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை கண்டித்து நவம்பர் 20ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விரைவில் திருநெல்வேலி சமூக நல்லிணக்க கூட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார். தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகள், சாதியக் கொலைகளாக சித்தரிக்கப்படுவதாகவும், இந்த கொலைகள் சாதியக் கொலைகள் இல்லை என்றும் தெரிவித்த ஜான் பாண்டியன், தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை தடுத்திட வேண்டும் என்ற திட்டத்தோடு இந்த கொலைகள் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் பிசிஆர் என்பது கண்துடைப்பு, அதை வைத்து எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அதை வெறுப்பதாக கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இல்லை என்று தெரிவித்த அவர், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் பாஜகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை என்றும், எதிர் காலத்தில் அவர்கள் இணைந்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர், ஏன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் சேரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் 10 ஆயிரமாவது பழங்குடியினர் வகுப்புச் சான்றிதழ்.. மாவட்ட ஆட்சியர் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.