இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய்தத், இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 92 முதல் 95 சதவிகிதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. தமிழகத்தில் இருந்தே தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி, வரும் 13 ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மோடி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை மறைக்க அவர் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள், தற்போது ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற மோடியை டாடி என்று அழைக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும் , கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மக்களை சந்திக்க வராத பிரதமர் தற்போது தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.