ETV Bharat / state

தண்டவாளம் அருகே மரம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு; எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்!

திருநெல்வேலி: குறுக்குத்துறை அருகே ரயில்வே தண்டவாளம் அருகிலிருந்த மரம் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன.

author img

By

Published : Nov 30, 2020, 11:59 PM IST

Updated : Dec 1, 2020, 7:16 AM IST

Agitation as a tree caught fire near the rail; Express trains stop midway!

நெல்லை குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகே நேற்று(நவ.30) மாலை தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மருத மரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கவனித்த ரயில்வே கேட் கீப்பர், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 100 அடி உயரமுள்ள அந்த மரத்தின் நடுப்பகுதியில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததில் மரத்தின் வெளிப்பகுதியில் எரிந்த தீ முற்றிலும் அணைந்தது. ஆனால், மரத்தின் நடுவே இருந்த துளை வழியாகத் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தீ அணையவில்லை.

ரயில்வே காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மரத்தின் அடியில் குப்பையை தீ வைத்து கொளுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் கன்னியாகுமரி விரைவு வண்டி சரியாக 6.47 மணியளவில் அந்த வழியாக வந்தது. ஆனால், தண்டவாளத்தின் மிக அருகில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கருதி கன்னியாகுமரி விரைவு வண்டி நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அதேபோல் சுமார் மாலை 7.40 மணியளவில் அந்த வழியாக வந்த அனந்தபுரி விரைவு வண்டியும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். மின் வழித்தடத்தின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து டீசல் இன்ஜின் வரவழைக்கப்பட்டது.

பின்னர் மின்சார இன்ஜின் அகற்றப்பட்டு, டீசல் இன்ஜின் மூலம் கன்னியாகுமரி விரைவு வண்டி நெல்லை ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிறகு மீண்டும் அங்கிருந்து மீண்டும் மின்சார இன்ஜின் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 8.30 மணி அளவில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதற்கிடையில் மரத்தின் நடுப்பகுதியில் உள்ள துளையில் தொடர்ந்து, தீப்பற்றி எரிவதால் அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். தீயை அணைக்க முடியாத பட்சத்தில் மரத்தை வெட்டி எடுக்கும் முயற்சிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:டெல்லியில் 800 ரூபாய்க்கு கரோனா பரிசோதனை!

Last Updated : Dec 1, 2020, 7:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.