ETV Bharat / state

வேலை கொடுக்காத சமஸ்கிருதம், இந்தி தமிழகத்திற்கு எதற்கு? - நடிகை ரோகிணி கேள்வி! - நடிகை ரோகிணி

வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்காத சமஸ்கிருதமும் இந்தியும் தமிழகத்திற்கு எதற்கு என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவரும், நடிகையுமான ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ரோகிணி கல்விக்கொள்கை மற்றும் மத்திய அரசு குறித்து நெல்லையில் பேச்சி

author img

By

Published : Jun 26, 2023, 6:07 PM IST

நடிகை ரோகிணி மேடை பேச்சு

திருநெல்வேலி: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே உள்ள வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக இன்று (ஜூன் 26) கலை விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகையும், சங்கத்தின் துணை தலைவருமான ரோகிணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் பாடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர் வி.கே.புரம் பகுதியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய நடிகை ரோகிணி கல்விக்கொள்கை குறித்தும் மத்திய அரசு குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், "படித்துவிட்டு வேலையின்றி எத்தனை பேர் இந்தியாவில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை யோசிக்காத, மக்களுடைய வாழ்க்கை முறையை பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை இங்கு திணிக்கிறார்கள்.

கல்விக்கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம், இந்தி படிக்கச் சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் படித்தால் அர்ச்சனை செய்யக்கூடிய வேலை மட்டுமே கிடைக்கும். சமஸ்கிருதம் படித்தால் நமது குழந்தைகளுக்கு அர்ச்சகர் வேலை கொடுப்பார்களா?. இவர்களுக்கு வேலையாட்கள் வேலையாட்களாகவே இருக்க வேண்டும், வசதி வாய்ந்தவர்களின் குழந்தைகள் தான் அதிகாரத்தில் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டம் உள்ளது. இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறோம் ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்தி படித்தவர்கள் எல்லாம் ஏன் தமிழகத்திற்கு வந்து கட்டிட வேலை செய்ய வேண்டும். இந்தி படித்தால் தான் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நமது கல்விக்கொள்கையில் இந்தியைத் திணிக்கிறார்கள். அங்கே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராத இந்தியை நாம் இங்கு எதற்குப் படிக்க வேண்டும்?. மத்தியில் இருப்பவர்கள் தமிழகத்தின் மீது பொறாமையில் சுற்றி திரிகின்றனர். ஏனென்றால் நாம் நமது குழந்தைகளை முற்போக்கு தனத்துடன் வளர்க்கிறோம். நமக்கு எதிராக மிகப்பெரிய சதி நடக்கிறது. தமிழர்களை நாங்கள் தலையில் வைத்துள்ளோம் எனக்கூறி, இங்கிருந்து செங்கோலை கொண்டு செல்கின்றனர்.

ஆனால் அதற்கெல்லாம் நாம் அசருவது கிடையாது. வள்ளலார் சமத்துவத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் மத்தியில் இருப்பவர்கள் அதை ஆன்மீகமாக மாற்ற முயற்சி செய்கின்றனர். திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூச முயற்சி செய்கின்றனர். இதெல்லாம் நம்மை உடைப்பதற்கான முயற்சி. சட்டமன்ற தேர்தலில் நாம் யார் என்பதைக் காண்பித்துவிட்டோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யார் என்பதைக் காண்பிக்கப் போறோம். தென் இந்தியாவில் நம்மால் எதையும் செய்யமுடியவில்லை என மத்தியில் இருப்பவர்களுக்குப் பெரிய துர் கனவாக உள்ளது” என மத்திய அரசைத் தாக்கி பரபரப்பாகப் பேசினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு சொல்லியிருக்கிறார்? - உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.