திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கமளித்த ஆட்சியர் விஷ்ணு, “திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாய கூடங்களை அரசியல் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது அதன் விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும்” என்றார்.
இதையும் படிங்க : ராணுவ சேவை நாட்டிற்குத் தேவை: பாதுகாப்புப் படைக்கு கிராமம் தரும் சேவை!