ETV Bharat / state

நாட்டின் கடைசி ஜமீன்தாரான சிங்கம்பட்டி சீமராஜாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! - india

இந்தியாவின் கடைசி ஜமீன்தாரரான முருகதாஸ் தீர்த்தபதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவின் கடைசி ஜமீன்தாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

author img

By

Published : May 25, 2022, 4:00 PM IST

நெல்லை அம்பை அருகிலுள்ள சிங்கம்பட்டியில் இந்தியாவின் கடைசி ஜமீன்தாரரான முருகதாஸ் தீர்த்தபதி வாழ்ந்து வந்தார். 3 வயதில் இவருக்கு ஜமீன்தாராக முடிசூடப்பட்டது. இந்த நிலையில் இவரின் சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 74 ஆயிரம் ஏக்கர் நிலம் 1952ஆம் ஆண்டு ஜமீன்தார் ஒழிப்புச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்டது. எஞ்சிய நிலத்தில் விவசாயம் செய்து அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலின் மூலஸ்தானமான சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ராஜா உடை அணிந்து கலந்து கொள்வார்.

தொடர்ந்து கோயில் அறங்காவலராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அம்பை பகுதியில் இவரது பெயரில் மருத்துவமனை, பள்ளிக்கூடம் தற்போதும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இதேநாளில் (மே 24) சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையொட்டி சிங்கம்பட்டியிலுள்ள அவரது அரண்மனையில் இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவின் கடைசி ஜமீன்தாரரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு

அப்போது அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மறைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது நினைவாக அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் அறங்காவலராக செயல்பட்ட சொரிமுத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது, இதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறினர்.

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.