ETV Bharat / state

நெல்லையில் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 28 லட்சம் - 28 lakhs seized by flying squad at tirunelveli

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tirunelveli
திருநெல்வேலி
author img

By

Published : Mar 17, 2021, 10:03 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று(மார்ச்.17) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்திச் சோதனையிடதில் அவரிடம் 28 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மைதீன் என்பதும், தனியார் நிறுவனங்களில் அன்றாட வரவுப் பணத்தை வசூல் செய்து வங்கியில் டெபாசிட் செய்யும் பணியினை மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. அவரிடமிருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை அலுவலர்கள் பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் வருமான வரித்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பறக்கும்படை சோதனையின்போது, பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பிடிபட்டால், அதுகுறித்து விசாரணை நடத்தப் பறக்கும் படை அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது. அதனடிப்படையில் தற்போது பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள், மைதீனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:
உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பறிமுதல்
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.