தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தை சார்ந்த பெண்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஓய்வூதியத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ருபாயாக உயர்த்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
திட்டமிட்டபடி சத்துணவு ஊழியர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கண்டன கோஷமிட்டபடி வந்தனர். தீடீரென கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் மறியலில் ஈடுபட்ட சுமார் 200 பெண்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க : தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்: சளைக்காத அரசியல்வாதிகள்