திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை சந்தனமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் சுதாக்ஷினி என்னும் பெண் குழந்தை உள்ளது.சுதாக்ஷினி நேற்று மாலை கிராமத்தின் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த சிறிய சாலையில் வேகமாக வந்த கார் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதனால் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தது.
விபத்தை ஏற்படுத்திய நபர் நிற்காமல் காரை ஓட்டி சென்றதால் அங்கிருந்த மக்கள் பதற்றம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு உடனடியாக உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர் விஜய நாராயணம் காவல் துறையினர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்தை ஏற்படுத்தியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயபால் என்பது தெரியவந்துள்ளது.பின்னர், அவராகவே காவல் நிலையத்தில் சரணடைந்தார்.இவர், மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையும் படிங்க:திருநெல்வேலி வழியாக செல்லும் 11 நாள் சுற்றுலா ரயில் - ஐஆர்சிடிசி அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விபத்தை ஏற்படுத்தியவர் இருப்பதை அறிந்த பாண்டிச்சேரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வழக்குப் பதிவு செய்யாமல் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞரை வெளியே அனுப்பும்படி போராட்டத்தில் ஈடுபட்டுக் கேட்டுக் கொண்டனர். சில மணி நேரங்கள் போராட்டம் நீடித்த நிலையில் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை பேரில் கலைந்து சென்றனர். அவ்வூர் மக்கள் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டனர்.
மது போதையில் வாகனத்தை இயக்கி எவ்வித சலனமும் இன்றி விபத்தை ஏற்படுத்திய நிகழ்வு அப்பகுதி மக்களை பெரும் கவலைக்குள்ளானது. மேலும் உயிர் இழந்த குழந்தையின் பெற்றோர் யாரும் மது போதையில் வாகனத்தை இயக்காதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இரண்டு வயதுக் குழந்தையை உயிரிழந்திருப்பது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:செல்போன் பேசிய படி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்!