மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் பல அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று தேனி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மண்வெட்டியுடன் அரை நிர்வாணமாக நின்றபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.