ETV Bharat / state

17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழப்பு: இளைஞர் போக்சோவில் கைது! - இளைஞர் போக்சோவில் கைது

தேனி: போடி அருகே திருமணமாகாத 17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழந்த வழக்கில், இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

17-year-old girl dies after childbirth  Youth arrested for 17-year-old girl dies after childbirth case  Nursing student death in theni  தேனியில் நர்சிங் மாணவி உயிரிழப்பு  17 வயது சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு  இளைஞர் போக்சோவில் கைது  போக்சோ சட்டம்
Youth arrested for 17-year-old girl dies after childbirth case
author img

By

Published : Jan 5, 2021, 6:07 PM IST

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தாய் - தந்தை இல்லாத நிலையில் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்துவந்தார். கரூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராகப் பணிபுரிந்துவந்தார்.

கரோனா காலத்தில் ஊர் திரும்பிய சிறுமி, போடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி தீராத வயிற்று வலி என அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அன்றிரவே அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு சிறுமிக்கு ரத்தப்போக்கு அதிகமான காரணத்தால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் - சேய் இருவரும் அனுமதிகப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

குழந்தைக்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில், தனது பேத்தி கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது தாத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் செல்போன் எண்ணில் தொடர்பிலிருந்த நபர்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், நாகலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. மேலும் சிலருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக்கைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: எனக்காக யாருமில்லை: குடும்பத்தினரை வெறுத்த இளம்பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.