தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அல்லிநகரம், போடி பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவருகிறது. அதனால் ஐம்பது ஏக்கர்களுக்கும் மேல் வனப்பகுதி தீயில் கருகியுள்ளது. அதன் விளைவாக அங்குள்ள அரியவகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகி பலியாகியுள்ளன.
அதில், போடி வனப்பகுதிகள் ஊருக்கு அருகில் உள்ளதால் வனவிலங்குகள் உள்புகும் அபாயம் உள்ளது. எனவே வனத் துறையினர் விரைந்து தீயை அணைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார் - நல்வாய்ப்பாக தப்பிய 4 பேர்