தேனி மாவட்டம்,போடிஅருகே உள்ளதுகுரங்கணிமலைப்பகுதி. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப்பயிற்சிக்குச்சென்றசுற்றுலாப்பயணிகள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இச்சம்பத்திற்குப்பின் தேனி மாவட்டத்தில் காட்டுத்தீ எரிவது குறையத்தொடங்கியது.
ஆனால், தற்போது கோடைகாலம் தொடங்கியதால், கும்பக்கரை,அகமலை, அடுக்கம் உள்ளிட்ட இடங்களில் காட்டுத் தீ ஏற்படுகிறது.இதனைத்தடுக்க வனத் துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டும் அவ்வப்போது காடுகள் பற்றியெரியத்தான் செய்கிறது.
இந்நிலையில், நேற்றுகுரங்கனிஅருகே உள்ள காரியாபட்டி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் வனப்பகுதியிலிருந்த அரியவகை மரங்களும், மூலிகைச்செடிகளும் எரிந்து நாசமாகின. மேலும், வனவிலங்குகளும் வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழல்உண்டானது.
தீயை அணைக்கும் முயற்சியில் வனத் துறையினர் தீவிரமாகபோராடிவருகின்றனர். அவர்களுடன்உள்ளூர்பொதுமக்களும், விவசாயிகளும் உதவி வருகின்றனர்.