ETV Bharat / state

ஆடிட்டர் குருமூர்த்தி என்ன உத்தமபுத்திரனா ? - கொதித்தெழும் புகழேந்தி! - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி : சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள், அது குறித்து பேச ஆடிட்டர் குருமூர்த்திக்கு எந்த உரிமையுமில்லை என கர்நாடக மாநில அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

ஆடிட்டர் குருமூர்த்தி என்ன உத்தமபுத்திரனா  ? - கொதித்தெழும்  புகழேந்தி!

author img

By

Published : Jan 16, 2021, 6:08 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று (ஜன.15) நேரில் சந்தித்த கர்நாடக மாநில அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான புகழேந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தான் முடிவெடுப்பார்கள். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். சசிகலாவை சேர்த்தால் தான் அதிமுக வெற்றி பெறமுடியும் என்ற ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அதிமுக விவகாரங்களில் தலையிடுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கர்நாடக மாநில அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது

குருமூர்த்தி என்ன உத்தமபுத்திரனா ? யார் அவர் ? அவர் எங்கிருந்து இதனை எல்லாம் பேசுகிறார் ? அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு குருமூர்த்திக்கு எந்தவித தகுதியும் இல்லை.

அவர் நம்பியிருந்தது நடிகர் ரஜினிகாந்த்தை மட்டும் தான். அவர் நல்ல மனிதர், தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இறங்கும் முடிவை கைவிட்டதால், தற்போது குருமூர்த்திக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அவர் இவ்வாறாக பேசி வருகிறார். தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முத்துராமலிங்கத் தேவர் ஏற்கனவே சொல்லி விட்டார், அதனை குரூமூர்த்தி சொல்ல என்ன இருக்கிறது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இருக்கும் விழா மேடையில் திராவிட கட்சிகள் அனைத்தும் நலிவுற்று போய்விடும் என அவர் சொல்கிறார். குருமூர்த்தி என்ன உத்தமபுத்திரனா ? இப்படிப்பட்ட கருத்துக்களை எல்லாம் அவர் சொல்லும் பொழுது வேதனையை ஏற்படுத்துகிறது. சாதி கட்சிகள் உருவாக அதிமுக தான் காரணமென கூறும் ஆடிட்டர் குருமூர்த்தி, பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் லிங்காயத்து, கெளடா போன்ற சாதி கட்சிகள் உருவாக யார் காரணம் என்பதை சொல்வாரா ?

தன் மீதுள்ள வழக்குகளை சரி செய்வதற்கே டி.டி.வி தினகரனுக்கு நேரம் போதவில்லை. பிறகு எங்கே கட்சி நடத்தப் போகிறார். அவருக்கு இருப்பது வெறும் 5.3 % வாக்கு வங்கி மட்டுமே. உண்மையில் அவர் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார். அதைக்கூட நான் தான் அவருக்கு தெரிவித்தேன். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிப்பெற்ற டி.டி.வி.தினகரன், இதுநாள் வரை தொகுதிப் பக்கமே செல்லவில்லை” என கூறினார்.

இதையும் படிங்க : 23 தமிழ்நாடு பேருந்துகளை பறிமுதல் செய்த ஆந்திரப் பிரதேச அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.