ETV Bharat / state

'முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மீண்டும் போராட்டம் நடத்துவோம்' - வைகோ!

author img

By

Published : Feb 23, 2023, 4:32 PM IST

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை மற்றும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம் என கம்பம் நகரில் திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ தெரிவித்துள்ளார்.

Etv Bharat திருமண விழாவில் பேசிய வைகோ
Etv Bharat திருமண விழாவில் பேசிய வைகோ

திருமண விழாவில் பேசிய வைகோ

தேனி: கம்பம் நகரில் மதிமுக மாவட்டச்செயலாளர் ராமகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் மதிமுக கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியனார். தொடர்ந்து பேசிய வைகோ, ''முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். தற்போது வரை கேரள அரசு புதிய அணை கட்டுவதாக தகவல் தெரிவித்து வருகின்றது.

அவ்வாறு கேரள அரசு புதிய அணையைக் கட்டினால் அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்தினால் முல்லைப்பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணை என இரு அணைகளும் உடைந்து தண்ணீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டு இரண்டு மாநிலங்களுமே அழிவிற்கு செல்லும் அபாய நிலை ஏற்படும்.

எனவே, நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க இருந்தாலோ, கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ மீண்டும் தேனி மாவட்டத்தில் நடைபயணம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். திருமண விழாவில் மதிமுக செயல் தலைவர் துரை வைகோ, கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், திமுக வடக்கு மாவட்ட கழகச்செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் இடைத்தேர்தலில் வென்றது போல; ஈரோட்டிலும் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.