இது குறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதி உழவர்களின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின்கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில், முதல்போக பாசன பரப்பான நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர், வாடிப்பட்டியில் 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு ஜூன் 4 முதல் 120 நாள்களுக்கு வைகை அணையிலிருந்து 6,739 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
![இன்றுமுதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/maxresdefault_0406newsroom_1622770004_964.jpg)
இதன்படி, இன்றுமுதல் வைகை அணையிலிருந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இது உழவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.