தேனி: கடந்த 1922ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி இந்தாண்டுடன் நூறாண்டுகளை நிறைவு செய்கிறது. தற்போது, இப்பள்ளியில் 85 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நூற்றாண்டு காணும் இப்பள்ளியை சிறப்பிக்கும் விதமாக வாழையத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்குத் தேவையான பொருட்களை கல்வி சீராக கொடுத்தனர்.
இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதி செய்த தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஊர் பொதுமக்கள் இணைந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக வழங்கினார்கள். இதில் தொலைகாட்சி, பீரோ, நாற்காலி, டேபிள், மின்விசிறி குப்பைத் தொட்டி, தட்டு, டம்ளர், குக்கர், புத்தகம், புத்தகப் பை, அச்சுப்பொறி போன்றவைகளை சீர்வரிசையாக வழங்கினர்.
இதையும் படிங்க: ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்