தேனி : திரைப்பட நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகியதை வரவேற்கும் விதமாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டரை தயார் செய்து, ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தேனி மாவட்ட விஜய் ரசிகர்களும் ’விஜயை அரசியலுக்கு இழுத்தே தீருவது’ என கங்கணம் கட்டிக்கொண்டு தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
'நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், நாளைய சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டி’ என தேனி நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வாருங்கள் என்றும்; தமிழ்நாட்டின் வருங்கால முதல்வரே என்றும் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
'இன்று தளபதி; நாளை தமிழ்நாட்டின் தளபதி' என விஜய் அரசியலுக்கு வரும் விதமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிக்காத படத்திற்கு போஸ்டர்.. பொங்கி எழுந்த யோகி பாபு.. ஆடியோவில் கூறியது என்ன..?